சுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : கே.ராஜசேகரன்

து 1982-ம் வருஷம். நானும் அவரும் அமெரிக்கா போயிருந்தோம். ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் எழுதுறதுக்காக, ஆனந்த விகடன்ல டிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை ஒரு டூர் அனுப்பியிருந்தாங்க. அங்கே சங்கர் ரமணினு அவரோட நண்பர் இருந்தார்.  `டல்லஸ் தமிழ்ச் சங்கம்’ சார்பா அவர் எங்களை இன்வைட் பண்ணியிருந்தார். அங்கே ஒரு கூட்டம் போட்டு, என் கணவருக்கு மரியாதை பண்ணினாங்க. இந்த கம்ப்யூட்டர், டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட் கம்பெனியில் அப்போதான் புதுசா வந்திருந்தது. பால் பாண்டியன்னு ஒருத்தர்... அவர்தான் அந்த கம்பெனியை ஆரம்பிச்சார். அவரும் சங்கர் ரமணியும் சேர்ந்து இவருக்கு இந்த கம்ப்யூட்டரைப் பரிசா கொடுத்தாங்க. இதை எடுத்துட்டு இந்தியாவுக்கு வந்தோம்.

ஆனா, பெங்களூர் ஏர்போர்ட் கஸ்டம்ஸ்ல இருந்த அதிகாரிங்க இந்தக் கம்ப்யூட்டருக்கு வரி கட்டணும்னு சொல்லிட்டாங்க. அவங்க சொன்ன தொகை, அந்த கம்ப்யூட்டரின் விலையைவிட அதிகம். `இவ்வளவு அமௌன்ட் கட்டணும்னா, இந்த கம்ப்யூட்டரே வேணாம்’னு சொல்லிட்டார் என் கணவர். அங்கே இருந்த கஸ்டம்ஸ் ஆபீஸர் மகாராஷ்டிராக்காரர். அவரும் மராத்தியில்  கதை எழுதுறவர். அவர் எங்க நிலைமையைப் புரிஞ்சுகிட்டார். ‘நீங்க ஒரு எழுத்தாளர். இந்த கம்ப்யூட்டர் உங்களுக்குப் பரிசா வந்த பொருள். இது உங்களுக்குக் கிடைச்ச மரியாதை. அதனால இதுக்கு வரி போட எனக்கு மனசு வரலை. இருந்தாலும், ஒரு சாதாரணத் தொகை சொல்றேன்... அதை மட்டும் கட்டிடுங்க’ன்னார். 3,000 ரூபாயோ, 4,000 ரூபாயோ... அதைக் கட்டிட்டு, கம்ப்யூட்டரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தோம்.

அதுக்கப்புறம் அவர் எழுதின எல்லா படைப்புகளுமே இந்த கம்ப்யூட்டர்ல எழுதினதுதான். ‘கற்றதும் பெற்றதும்’, உட்பட முக்கியமான தொடர்கள், நாவல்கள், சிறுகதைகள், சினிமா வசனங்கள் எல்லாத்தையும் இதுலதான் எழுதினார். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்ல அப்டேஷன்ஸ் வர வர, அதையெல்லாம் இந்த கம்ப்யூட்டர்லேயே செஞ்சுகிட்டார். அவர் ஆபீஸ்ல இருந்து இன்ஜினீயர்கள் வருவாங்க. அப்பப்போ கம்ப்யூட்டர்ல வேணும் கிறதை செஞ்சு குடுத்துட்டுப் போயிடுவாங்க. கடைசி வரைக்கும் இந்த கம்ப்யூட்டரை அவர் மாத்தவே இல்லை. மலேசியாவுல இவருக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தார். அவர் மூலமா தமிழ் சாஃப்ட்வேர், ஃபான்ட்ஸ் வரவழைச்சு, தமிழ்ல எழுதிட்டு இருந்தார். அவருக்கு கண்ல பிரச்னை இருந்ததால, கம்ப்யூட்டர்ல ஃபான்ட் பெருசா வெச்சு எழுதுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick