நானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம் : பிரேம் டாவின்ஸி - படம் : கே.ராஜசேகரன்

ப்போது நான் அசோகமித்திரனைச் சந்தித்தேன்? எங்கே சந்தித்தேன்? யோசனை செய்துகொண்டே இருக்கிறேன். ஞாபகத்திற்கு வரவில்லை. முதன்முதலாக அவருடைய கதைப் புத்தகத்தை தி.நகரில் வீராசாமி் தெருவில் உள்ள நூல்நிலையத்தில், படிக்க எடுத்தேன். அந்தத் தொகுதியில்தான் எனக்குப் பிடித்த கதையான ‘ரிக்‌ஷா’ வந்திருந்தது. அதைப் படித்துப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். அவர் பெரும்பாலான கதைகளை வாசகர்களிடம் விட்டுவிடுவார். வாசகர்தான் அந்தக் கதையை முடிக்க வேண்டும். மேலும், அவர் கதைகள் ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். ஆடம்பரமான வார்த்தைச் சேர்க்கை தென்படாது. கிட்டத்தட்ட ஒரு செய்தித்தாளைப் படிப்பதுபோல் இருந்தாலும், ஆழமான உணர்வுநிலைக்குப் படிப்பவரைக் கொண்டுசெல்லும். நான் கதைகள் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவன். பொதுவாக, கதைக்கென்று ஒரு விதி இருக்கும். ஒரு ஆரம்பம் பின் முடிவு என்று. ஆனால், அசோகமித்திரன் அதை முற்றிலும் மாற்றிவிட்டார். அப்போதிலிருந்தே எனக்கு அசோகமித்திரன் மீது பெரிய மதிப்பு ஏற்பட்டுவிட்டது. சந்தித்து, பார்க்க வேண்டும் என்று நினைத்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து
கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick