தமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
120 புத்தகங்கள்!ஓவியம் : கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி

ன்றைய அளவு அபத்தமான, ஆபத்தான நிலைமையில், தமிழ்நாட்டு அரசியல் அன்று இல்லை. அது கொள்கைவாதிகளும் கோட்பாட்டாளர்களும் நிரம்பியது. சமூக சேவகர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் நிரம்பியது. தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்துத் தேசியம், சர்வதேசியம், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம்... என எந்தத் தத்துவத்தை முன்னெடுத்தாலும் அவர்களது சிந்தனை, செயல், போராட்டம், வாதம், பிரதிவாதம் அனைத்துமே தங்களது கோட்பாடுகளை வென்றெடுப்பதாகவே அமைந்திருந்தது. இன்று மிக மோசமானவர்கள் கையில் அரசியல் நிலைக்களம் போய்ச் சேர்ந்தாலும், மிக மிக மோசமானதாக சூழ்நிலை மாறாமல் இருப்பதற்குக் காரணம், அந்த ஆளுமைகள் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான். அந்த அடித்தளத்தை உணர்வதற்கான தேடுதலில் விடை தேடும் பிரதிகள்தான் இவை.

தமிழகத்தின் கடந்தகால அரசியலை, வரலாற்றை, நிகழ்வுகளை உணர, முன்னோட்டமாக சிலவற்றைப் படித்தாக வேண்டும். அப்படி அவசியம் படித்தாக வேண்டிய புத்தகங்கள் இவை. பட்டியல் என்பது தொகுப்பவனின் குணம் சார்ந்தது. அந்த அடிப்படையில் முழுமையைக் கண்டடைவது சிரமம். முழுமையை நோக்கிய நகர்வுக்கு இந்த 120 புத்தகங்கள் நிச்சயம் வழிகாட்டியாக அமையும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick