சேலம் சிவா லாட்ஜ் போதையில் உளறுகிறது - ஜான்சுந்தர்

ஓவியம்: ரமணன்

ண்பிள்ளைகள்
அழக் கூடாதென்பவன் எவனோ
சாரங்கி வில்லுக்கு முன் நின்று
அவன் தன் மார்பை விரிக்கட்டும்.

நீங்கள் வழக்கம்போலவே
உயர்சுரக் கமகங்களுக்கு
ஜீவனை ஒப்புக்கொடுங்கள் பாபு.

உப்புக்கடலை ரப்பைகளுக்குள்
ஒளித்துவைப்போம் பாபு
பொத்தல் விழும் கனவுகளில்
அடவுகளைக் குழைத்துப் பூசி
தூக்கத்தைத் துண்டு துண்டாய் நறுக்கி
புட்டிகளிலிட்டு வைப்போம்.

வெகுசீக்கிரம் நாமிந்த
பெருமூச்சிலிருந்து
வெளியேற வேண்டும். 

‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’
என்பது ஒன்றும் வேதவசனம் அல்லவே பாபு

தேவி நமக்கருளிய இரண்டு கோப்பைகளையும்
ஒரே ‘கல்ப்’பில் அடித்துவிட நம்மாலாகாதா
விகடகவிகளில்லையா நாம்.

பொறுத்திருங்கள் பாபு
சலங்கைப் பட்டையினைக் கட்டி நாம் நிமிர்ந்ததும் 
புழுதியெழ நடமிடுவாள் செங்காளி.
ரெண்டே நிமிடம் பொறுத்திருங்கள்
தீக்காய்கிறது என் பறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick