முத்துக் குளிப்பவர்கள் என்று யாரும் இல்லாத நிலத்தினோரம் - பெரு.விஷ்ணுகுமார் | Poetry - Vishnukumar - Vikatan Thadam | விகடன் தடம்

முத்துக் குளிப்பவர்கள் என்று யாரும் இல்லாத நிலத்தினோரம் - பெரு.விஷ்ணுகுமார்

ஓவியம் : செந்தில்

முத்துக்களே இப்பொழுதெல்லாம்

கிளம்பிக் கரையேறிக்கொள்கின்றன

வேறு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல்

மெல்ல மெல்ல ஊர்ந்து

தன்னிறம் மாற்றி

உருவம் மாற்றி

அங்கு சுண்டல் விற்பவனின்

கோன் வடிவ பொட்டலத்திற்குள் புகுந்துகொள்கின்றன

அந்தச் சிறுவன் கூவிக்கூவி

`வாங்க சார்... வாங்க சார்.

ரெண்டு ரூபா சார்.

சுண்டல் ஒவ்வொண்ணும் முத்துபோல இருக்கு சார்’

என்று விற்றுக்கொண்டிருக்கிறான்

பொட்டலத்துள் இருக்கும் கண்கள்

திருதிருவென முழிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick