நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 6 - சி.மோகன் | Different Stages of Painting - C.Mohan - Vikatan Thadam | விகடன் தடம்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 6 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபாவிஸம்: வனவிலங்குகளின் வண்ண வசீகரம்

ருபதாம் நூற்றாண்டின் முதல் கலை இயக்கம், ஃபாவிஸம். 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் கிளாடு மோனேயின் புதிய கலைக் கோட்பாட்டின் அடிப்படையில் நவீனக் கலையின் முதல் அலையாக இம்ப்ரஷனிஸ இயக்கம் தோன்றியது. அதன் கோட்பாடு மற்றும் கலைச் செயல்பாடுகளின் மீது நம்பிக்கைக்கொண்டிருந்த அடுத்தகட்டப் படைப்பாளிகள், வேறு சாத்தியங்களில் கவனம் செலுத்தியதைத் தொடர்ந்து, பின்-இம்ப்ரஷனிஸ இயக்கம் 1880-களில் எழுச்சி பெற்றது. பால் செசான், வின்சென்ட் வான்கா, பால் காகின் என்ற மூன்று கலை மேதைகளின் பேராற்றலில் நவீனக் கலை, புதிய பிராந்தியங்களை வசப்படுத்தி, செழுமையும் வளமும் கொண்டு இயங்கியது. இதனைத் தொடர்ந்து, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பின்-இம்ப்ரஷனிஸ இயக்கத்தின் அழகியல் அம்சங்கள் மற்றும் படைப்பாற்றல் வளங்களை ஏற்றுக்கொண்டு, வண்ணம் மற்றும் வடிவம் பற்றிய புதிய சிந்தனைகளோடு செயல்படத் தொடங்கியதுதான் ‘ஃபாவிஸம்’ என்ற கலை இயக்கம். வண்ணங்கள் மூலம் தங்களுடைய அக உலகை வெளிப்படுத்திய பின்-இம்ப்ரஷனிஸப் படைப்பு மேதைகளான செசான், வான்கா, காகின் ஆகியோரின் படைப்புகளே இந்த இயக்கத்துக்கான உந்துசக்தியாக அமைந்தன. ஹென்றி மத்தீஸ் இந்த இயக்கத்தின் பிரதான சக்தியாக இயங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick