“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : பா.காளிமுத்து

“நேரடியாக இங்கிருந்தே
அமெரிக்காவிற்கு விமானம்”
விளம்பரப் பலகையின் நிழலில்
நின்றுகொண்டிருக்கிறீர்கள்
இந்த மதியத்தை எப்படிக் கடப்பது என்று
தீர்மானிக்க முடியாமல்.


நடைமுறை வாழ்வின் வியர்வையும் கசப்பும் தன்னுள்கொண்ட கவிதைகளின் தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’  வழியாக அதிகம் அறியப்பட்டவர் சாம்ராஜ்.

‘கட்டபொம்மனின் நினைவுச் சின்னத்துக்கு சற்று தூரத்தில் தங்க நாற்கரச் சாலையில் தடதடத்துப்போகும் ஆங்கில எழுத்துகள்கொண்ட கன்டெய்னர் லாரிகள்’,  ‘இளம் விதவையின் வேட்கையைச் சாக்கடையை அள்ளி ஊற்றி அணைக்கும்’  அதி யதார்த்தக் காட்சிக் கவிதைகளுக்குச் சொந்தக்காரரான சாம்ராஜின் புத்தக அறைக்குள் நுழைந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick