சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கூத்துக் கலைஞர் ‘ஒம்’ முத்துமாரியின் சலங்கைசந்திப்பு: வெ.நீலகண்டன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

ப்பா, எனக்கு விட்டுச் சென்ற பெரிய சொத்து, இந்தச் சலங்கைதான். தோழர்கள் விரும்பும் கூத்தாடியாக இன்று எனக்குத் தனியான அடையாளத்தைப் பெற்றுத் தந்திருப்பதும் இதுதான். இடதுசாரி இயக்க மேடையில் அப்பாவுக்குத் தோழர்கள் பரிசளித்த சலங்கை இது. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் இதை உயிராக மதித்தார்.

அப்பா, விசித்திரமான மனிதர். அவருடன் பழகிய அத்தனை தோழர்களும் அதை அறிவார்கள். அவர் வாழ்ந்த வாழ்க்கையை வேறெவரும் வாழவே முடியாது. கலை, அவரை தன் போக்கில் அலைக்கழித்து எங்கெங்கோ கூட்டிச் சென்றது. கூத்துக்காக, தன் குடும்ப வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். மனைவி பிள்ளைகளைப் பிரிந்திருக்கிறார். உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். சொத்துகளைப் பறிகொடுத்திருக்கிறார். ஆட்டுக்கறி வியாபாரத்தில் இருந்து பீடி வியாபாரம் வரை அவர் பார்க்காத வேலைகள் இல்லை. எந்த வேலையைச் செய்தாலும் அவரது அன்றாடப் பொழுதுகள் கலையோடுதான் பிணைந்திருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick