இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள் | Why are people losing trust in politics - Vikatan Thadam | விகடன் தடம்

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ப.சரவணகுமார்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகச் சுவர்களில், ‘சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?’, ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’, ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ போன்ற முழக்கங்கள் நிறைந்திருந்தன. முக்கியமான திட்டங்கள் எல்லாம் வட மாநிலங்களுக்கே போகின்றன; வட மாநிலங்களே வளர்ச்சியடைகின்றன; தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்ற முழக்கங்கள் வீதிக்கு வீதி ஒலித்தன.

இப்போது, தாமிரபரணி, கூடங்குளம், கெய்ல், நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், இணையம் துறைமுகம் திட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் ஓய்வு ஒழிச்சலில்லாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவை ஒருபுறமிருக்க, ‘தென் மாநிலங்கள் அசுர வளர்ச்சி கண்டுவிட்டன. வட மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. இந்த இடைவெளியைச் சரிசெய்யாவிட்டால், விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்ற கருத்தோடு ஓர் ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிட்டு ‘The paradox of India’s North south Divide’ என்ற நூலை கலா சீதாராமன், ஸ்ரீதர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் உண்மை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்து வேலை தேடித் தென்னகம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள், செய்ய விரும்பாத எந்த வேலையையும் குறைவான கூலிக்குச் செய்கிறார்கள். எந்த வசதியும் இல்லாத மாட்டுத் தொழுவங்கள் போலிருக்கும் குடியிருப்புகளில் இடித்து நெரித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick