பெண் - அனார் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

பெண் - அனார்

ஓவியம் : கருப்பசாமி

ழைக்கு முன்பே
காற்று குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறிவிடுகிறேன்

அடிநிலத்தின் கீழ்
திரவியமாய் விழைகிறேன்

பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலின்
உப்பை விழுங்கிய ஆகாயம்

கனவும் விஷமுமான
மந்திரம் நான்

காலங்களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன்றின்
இடதும் வலதுமாவேன்

என்னை
எங்கு ஒளித்துவைக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick