‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன் | Conversion With book reading lover N Murugeshapandian - Vikatan Thadam | விகடன் தடம்

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

சந்திப்பு: வரவனை செந்தில் - படங்கள் : சதிஷ்குமார்

``இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதே நாளிதழ்களைப் பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. அதில் வரும் படக்கதைகள், நகைச்சுவைப் பகுதிகளைப் படித்துப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டேன். கிராமத்துப் பள்ளியில் படித்தாலும் வாசிக்கும் பழக்கம் பால்யத்திலேயே வந்துவிட்டது. நான்காம் வகுப்பு படிக்கும்போது நூலகத்தில் சிறுவர் இதழ்களைப் புரட்டிப்பார்க்கத் தொடங்கினேன். ஒருநாள் நூலகரிடம் சென்று, `உள்ளே இருக்கும் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோய் வாசிக்கலாமா?’ எனக் கேட்டேன். என் வயதைக் கேட்டார் நூலகர். `பதினொன்று’ என்றேன். `பெரியவர்களுக்கு மட்டும்தான் தர முடியும். வீட்டிலிருந்து பெரியவர்களை அழைத்து வா’ என்றார். என் அண்ணனை அழைத்து வந்தேன். அவரின் பெயரில் அனுமதிச் சீட்டு கொடுத்தார். அன்று நூலகத்துக்குள் நுழைந்தது, இன்றுவரை அங்குதான் இருக்கிறேன்” தான் வாசிக்கத் தொடங்கிய காலத்தை ஆர்வத்துடன் நினைவுகூர்ந்தார் ந. முருகேச பாண்டியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick