நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன் | Different Stages of Painting - C.Mohan - Vikatan Thadam | விகடன் தடம்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்ரியலிஸம் சல்வடோர் டாலி கனவின் புகைப்படங்கள்

லையில் யதார்த்த உலகின் காரண-காரிய நடைமுறை தர்க்கத்தை முற்றாக நிராகரித்த இயக்கம் சர்ரியலிஸம். ஆழ்மன உலகிற்குள் கனவுகளின் பாதை வழியாக உள்நுழைந்து, கலைக் கற்பனைகள் மூலம் அதன் வாசல்களைத் திறந்து சஞ்சாரம் செய்த படைப்பியக்கம். இதற்கு முன்னோடியாக அமைந்தது ‘டாடா’ என்ற கலை இயக்கம். இது, அக்காலகட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஃபாவிஸம் போலவோ, க்யூபிஸம் போலவோ ஒரு கலை பாணி அல்ல. அதிகாரத்துக்கு எதிராகக் கலகக் குரலாக எழுந்த ஒரு போராட்டக் கலை இயக்கமே டாடா. அதாவது, ஒரு குறிப்பிட்ட தன்மையில் அடையாளப் படுத்தக்கூடிய வெளியீட்டு பாணி அல்ல; அது ஒரு மனோபாவம். அக்காலகட்டத்திய சமூக, அரசியல், கலாசார மதிப்புகளுக்கு எதிராக உருவானது. தர்க்கபூர்வமா னவற்றுக்கும் அர்த்தபூர்வமானவற்றுக்கும் அப்பாற்பட்டது. ‘டாடா’ என்று இந்த இயக்கத்துக்குப் பெயர் வைத்த விதமே விநோதமானது. பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் அகராதிகளில் அங்குமிங்குமாகச் சில எழுத்துகளை எடுத்து அமைத்துக்கொண்ட பெயர். அர்த்தமற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்ற பிரயாசையில் உருவானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick