இந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன் | Indian and Tamil Cinema Centenaries - VMS Subagunarajan - Vikatan Thadam | விகடன் தடம்

இந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு’ என எழுதத் தொடங்கினேன். ஆனால், சினிமா நூற்றாண்டு, எனச் சொல்வதுதான் பேசுபொருளுக்குப் பொருத்தமாக, நெருக்கமாக இருக்கும் எனத் தோன்றியது. ஆம், எம் தமிழர் வாழ்வில் அது, ‘சினிமா’ என்பதாகவே பொதிந்திந்துள்ளது. அதை ‘திரைப்படம்’ என்றால், உணர்வுநிலை யிலிருந்து எழுதுபொருளாகிவிடுகிறது. ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...’ எனக் கவிஞர் வைரமுத்து அவர்கள் வேறொரு களத்தில்/தளத்தில் எழுதிய வரிகள், ‘சினிமா’ விடயத்தில் தமிழர்தம் ‘உள்ளில்’ கலந்து அதன் பகுதியாகிவிட்ட ஒன்றே. மிகச் சமீபத்திய இரண்டு நிகழ்வுகள் அல்லது பதிவுகளின் வழியாகப் பெற்ற உணர்வே, இப்படித் தொடங்க நிர்பந்திக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick