கவிதைகள் - தி.பரமேசுவரி

ஓவியம் : செந்தில்

ஜே.கேயின் கத்தரிக்கோல்

திரு.ஜேகே நிதானமாகவே தன் கடையைத் திறப்பார்
சுண்ணக்கட்டியால் துணியில் கோடிழுப்பது
காகிதத் தாள்களை அளவெடுப்பது, கழுத்தை வெட்டுவது
எல்லாவற்றிலும் ஓர் இசையிருக்கும்
எல்லாவற்றிலும்

ஆனாலும், அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது
பூனைபோல் நடக்கும் அந்தச் சீமாட்டியின் முலைகளை மழுங்கடித்துவிட்டார்
தன்னைப் பெருமிதமாய் ஆடியில் அவ்வப்போது பார்த்துக்கொள்பவள்
முகம் சுருங்கிப் போயிருக்கிறாள் நல்ல ஜம்பரொன்று நாசமாகிவிட்டதென
கூர்மையானது மொண்ணையாய் ஒன்றுமில்லாமலாகிப் போனதை
அவருக்கு விளக்குவது எப்படியென யோசித்தபடி வருபவளின்
டீப் கட் வைத்த ஜம்பரை பெருங்கண்களால் அளந்தபடி
வேறொரு துணியில் கைகளை வெட்டத் தொடங்குகிறார் திரு.ஜே.கே

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்