எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

வண்ணை சிவா

“கடினமான எந்த தானியத்தையும் பக்குவமாக உடைத்துத் தூளாக்கும் ஓர் அரவைத் தொழிலாளியாகத்தான் நான் இலக்கியத்தில் இயங்குகிறேன். எனக்கென்று தனி மொழிக்கட்டோ அடையாளங்களோ இல்லை. இந்தப் பூவுலகில் சக ஜீவிதங்களோடு இணக்கமாக வாழ்ந்து மடியவிருக்கிற சக உயிரி நான். என் வாழ்தலை என் குருதிகொண்டு எழுதிவைக்கிறேன். வளைவுகளோடும் நெளிவுகளோடும் நவீனச் சித்திரமாக நான் வரைகிற குறிப்புகள் எவருடைய சாயலையும் கொண்டிருக்காது.”

சமூகச் சிக்கல்களையும் நவீன வாழ்க்கைக்கூறுகளையும் புதிய மொழிநுட்பத்தோடு படைப்பாக்கும் வண்ணை சிவா, சென்னை மாதவரம் பகுதியில் மாவு அரவை மில் நடத்துகிறார். `நதியின் பயணம்’, `உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும்’, `ஒற்றைக்கல் சிற்பம்’, `உதிரநிறப் பொட்டு’, `வண்ணை வீதியில் திரியும் பொம்மைக் கிறுக்கன்’ போன்றவை இவர் எழுதிய நூல்கள். வழக்குரைஞராகவும் சிலகாலம் பணிபுரிந்திருக்கிறார். இடப்பெயர்வின் துயரங்களையும் சிக்கல்களையும் களமாகக்கொண்ட நாவல் எழுதிவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick