தலையங்கம் | Editorial - Vikatan Thadam | விகடன் தடம்

தலையங்கம்

‘ஜல்லிக்கட்டுத் தடை’க்கு எதிராக, தனது பண்பாட்டு உரிமைக்காக, சாதி, மத, வர்க்க பேதமற்று ஒன்றிணைந்து அறவழியிலான போராட்டத்தை முன்வைத்த இளைய தலைமுறைக்குப் பெருமைமிகு வணக்கம். ஒரு தேசத்தினுடைய பண்பாட்டுக் கூறுகளின் மீதுதான் பின்காலனிய ஆதிக்க அரசியலின் முதன்மையான தாக்குதல் தொடுக்கப்படும். அதை நன்கு உணர்ந்திருக்கும் புதிய தலைமுறைக்கு இன்னும் ஏராளமான கடமைகளும் கனவுகளும் காத்திருக்கின்றன. இந்தப் போராட்ட அலையும் இது மக்களிடம் உருவாக்கியிருக்கும் மனஎழுச்சியும் வரலாற்றில் என்றென்றும் அழுத்தமாகப் பதிந்திருக்கும்.

காலத்தில் கலந்துவிட்ட தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களுக்குத் தமிழஞ்சலி.

அசோகமித்திரனின் விரிவான நேர்காணல், ஜல்லிக்கட்டு குறித்த ரவிக்குமாரின் கோட்பாட்டுப் பார்வை, விமலாதித்த மாமல்லனின் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா அனுபவம்,  பவா செல்லதுரை மொழிபெயர்த்துள்ள பால் சக்காரியாவின் சிறுகதை, சென்னை இலக்கிய முகத்தை அறிமுகப்படுத்தும் கரன் கார்க்கியின் கட்டுரை, தற்காலச் சமூகவெளியில் காதல் உணர்வு வந்து சேர்ந்திருக்கும் இடத்தை அலசும் ஆர்.அபிலாஷின் பார்வை, மேலாண்மை பொன்னுசாமி, சி.மோகன்,

அ.முத்துலிங்கம், அழகிய பெரியவன், ம.செந்தமிழன், ஷங்கர், நரன், இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பங்களிப்புகளுடன் தொடர்கள், கதைகள், கவிதைகள் என இந்த இதழ்..!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick