“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன் | Chennai International Film Festival - Vikatan Thadam | விகடன் தடம்

“நிழலுருக்களுடன் உறவாடும் அனுபவம்!” - விமலாதித்த மாமல்லன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

ந்த வருட சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, ஜனவரியில் எட்டு நாட்களாக ஆறு திரையரங்குகள்; ஐந்து காட்சிகள்; 180 படங்கள் என்று காசினோ திரையரங்கை மையமாகக்கொண்டு நடந்து முடிந்துள்ளது. விழா என்று வருகையில், இத்தனைப் படங்கள் திரையிடப்படுவது இயற்கைதான். ஆனால், சினிமாவே உணவு என்று வாழ்பவரால்கூட, ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து படங்கள் என்றாலும் உச்சபட்சமாக நாற்பது படங்களைத்தான் பார்க்க இயலும். அதிலும், குறிப்பாக இரு படங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியையும் இரண்டு திரையரங்கு களுக்கு இடையிலிருக்கும் தூரத்தையும் சென்னையின் போக்குவரத்து நெரிசலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு தியேட்டரைவிட்டு இன்னொரு தியேட்டருக்குச் சென்று இரண்டையும் முழுதாகப் பார்ப்பது என்பது ஹெலிகாப்டர் இருந்தால் மட்டுமே சாத்தியம். இருந்தாலும், விழாவின் சுவாரஸ்யமே 180 திரைப்படங்களில்  எந்த 40 படங்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. திரையிடப் படுகிறவற்றில் எந்த சினிமாவைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்பது  கிட்டத்தட்ட, வாழ்க்கை போலவே பெரிய சூதாட்டம்தான்.

பொதுவாகவே, சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் படங்களின் தரம் இறங்குமுகத்தில் இருக்கிறது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. இருப்பதற்குள்தானே படங்களைத் தேர்ந்
தெடுத்தாக வேண்டும் என்கிற நிர்வாகத் தரப்பின் நெருக்கடியையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், இந்த ஆண்டு படங்களின் தேர்வு கொஞ்சம் சுமார்தான். ஆனால், எப்பேர்ப்பட்ட விழாவிலும் ஏழெட்டுப் படங்களே சிறந்தவையாக இருக்கும் என்பதை நிறைய வருடங்களாக, உலகத் திரைப்படங்களுடன் காதலில் இருக்கிற எவரும் தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick