வேடிக்கை பார்ப்பவர்கள் - ஸ்ரீஷங்கர்

ஓவியங்கள் : செந்தில்

செளகரியமாக நகர்ந்த இரவை முன்னமே அனுப்பிவிட்டு
தேநீர்க்கடையில் அன்றைய தினத்தின் முதல் ரொட்டியை
ராகிமால்ட்டில் நனைப்பவர்கள்
சாலையில் வாகனமொன்று
சேகரமான உலோகக் குப்பைத்தொட்டிகளைத் தூக்கி
தனக்குள் கவிழ்த்துவதைப் பார்க்கிறார்கள்
அதன்பொருட்டு
வாகனங்களின் தள்ளுமுள்ளு நிகழ்கிறது
சில தகவல்கோபுரங்கள் ஞாபகப்பிசகைச் சந்திக்கின்றன
இப்படியான காலத்தில்
விடுமுறை நாளொன்றின் முந்தைய இரவில் நிகழும்
கலவிச்சுவைப்புகளுக்குப் பின் உறக்கமிழந்த சிலர்
தளராடையில்
இறைச்சிக்கடை வரிசையில் நம்பிக்கையோடு நிற்க வேண்டியதுதான்
பாடசாலை உந்துகளின் எண்ணிக்கையோடு
மட்டமான உணவுகளைப் புசித்துக்கொண்டு
காதல்கொள்ள உடல்வேண்டித் தனித்து உழல்பவர்கள்
பெருக்கமடைகிற இங்கு
பொறுப்பற்றுத் திரியும் ஒருவன்
கால்சராயோடு கண்ணாடியில் முத்தமிட்டுத் திரியும் ஆண்களை
நாற்றமடிக்கும் வெளிச்சம்குன்றிய நீண்ட நடைபாதையை
பெண்கள்சூடும் மறைவுக்கச்சைகள் எதையும் அலங்கரிக்காத நைலான்கொடிகளை
காண நேர்கிறது
அப்போது
சேரிகளை ஒட்டிய கறுத்த நதிக்கரைப் பறவைகள்
இரை பொறுக்குவதைப் பார்த்தபடி உருளும்
மின்வண்டிகளில்
உள்ளங்கைகளை இசைத்தபடி சேமிக்கும் நாணயங்களை
திருநங்கைகள் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்
சிறு உணவுப் பொதிகளோடு பணிக்குச் செல்பவர்கள்
பார்க்க நேரும்படி
தடித்த சுத்தியலோடு நீலநிற மனிதர்கள்
குறுக்குமறுக்காக நீண்டுசெல்லும் இருப்புப்பாதைகளை
அடித்து முடுக்குவார்கள்
தனது அத்தனை அம்சங்களோடும் இயங்கிக்கொண்டிருக்கும்
இந்தத் திணைக்களத்துக்கு
வடகிழக்குத் தேசங்களிலிருந்து உழைத்துக் கொடுக்கும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick