எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...படம்: எம்.விஜயகுமார், வீ.சதிஷ்குமார், ம.அரவிந்த், பா.காளிமுத்து, வீ.சிவக்குமார்

குமாரநந்தன்

“பூமியில் சிதறிக்கிடக்கும் ஏராளமான வாழ்க்கை முறைகளை கதைகளின் வழியாக வாழ்ந்து களிக்கிறேன். இந்த டீக்கடையும், பலகார அடுப்பும் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என்னைப் பிணைத்துக்கொண்டுவிட்டன. உணவு மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பது, கதைகள் எழுதுவதற்கு இணையான ஆனந்தத்தைத் தருகிறது.”

முதலில் பாலமுருகன் என்ற இயற்பெயரிலேயே எழுதினார். தற்போது குமாரநந்தன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.  ‘பதிமூன்று மீன்கள்’, ‘பூமியெங்கும் பூரணியின் நிழல்’ இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், ‘பகற்கனவுகளின் நடனம்’ கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. கடையை நிர்வகித்துக்கொண்டு, ஒரு செய்தித்தாளில் உதவி ஆசிரியராகவும் பணிபுரிகிறார். சிறுவர் கதைகள் என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் சிறுவர்களுக்கான மந்திரஜாலக் கதைகளை எழுதி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick