நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில் | Tribute for Modern Painter Adimulam on January 5 - Vikatan Thadam | விகடன் தடம்

நாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வீன ஓவிய உலகின் தனித்துவமான அடையாளங்களில் ஒருவர், ஆதிமூலம். அவரது மகனான ஓவியர் அபராஜிதன் உள்ளிட்ட கலை ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கியது, ‘ஆதிமூலம் ஃபவுண்டேஷன்.’ “லாப நோக்கமற்ற ஒரு விரிவான பண்பாட்டு கலைச் செயல்பாட்டுக் களமாக இதை நாங்கள் கருதுகிறோம்’’ என்கிறார் அபராஜிதன்.

“இந்திய அளவில் நவீன ஓவியத்துக்கும் சமூகத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது, ‘சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி.’ சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் பல ஆளுமைகள் இந்தப் பெரும் பயணத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். இதன் வரலாற்று முக்கியத்துவம் இன்னும் மக்களிடம் முறையாகக் கொண்டுசேர்க்கப்படவில்லை.

இதை மனதில்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5-ம் தேதி அன்று ஆதிமூலம் ஃபவுண்டேஷன் சார்பில், கல்லூரியின் மகத்தான ஆளுமைகளை நினைவுகூரும்விதமாக நிகழ்வுகளை நடத்திவருகிறோம். ஆதிமூலம், தேவி பிரசாத் ராய் சௌத்ரி, கே.ராமானுஜம், எஸ்.தனபால் போன்ற பல கலை ஆளுமைகளின் படைப்புகளைக் காட்சிப்படுத்துவது, ஆவணப்படுத்துவது, நூலாக்கி வெளியிடுவது, அவர்களது பங்களிப்பின் முக்கியத்துவம் அறிந்த அறிஞர்களை, படைப்பாளிகளை நிகழ்வில் பேசச் செய்வது... என இதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம். அண்மையில் காலமான சிற்பி சி.தட்சிணாமூர்த்தி பற்றி இப்போது ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற செயல்பாடுகளின் இன்னொரு முகமாகத்தான் இந்த 2017-ம் ஆண்டுக்கான ஓர் அழகிய நாட்காட்டியை உருவாக்கி வெளியிடுகிறோம். தமிழ் இலக்கியத்தின் பெருமித அடையாளங்களான இலக்கிய ஆளுமைகள் பலரை ஆதிமூலம் வரைந்திருக்கிறார். காலத்தில் கலந்துவிட்ட எத்தனையோ ஆளுமைகள் அவரது கோட்டோவியங்களில் இன்னும் ஜீவன் ததும்ப வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். லா.ச.ராமாமிர்தம், உ.வே.சாமிநாதையர், செல்லம்மாவுடன் பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சுப்பிரமணியன், தி.ஜானகிராமன், நகுலன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், சா.கந்தசாமி, ஆத்மாநாம் என்கிற வரிசையில், பல்வேறு சமயங்களில் பல்வேறு பயன்பாடுகளுக்காக ஆதிமூலம் வரைந்த 13 ஓவியங்களைப் பயன்படுத்தி இந்த நாட்காட்டியை உருவாக்கியிருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick