ருசியின் கல்லறை - சூ.சிவராமன்

த்தனை ஆதுரமாய் நாசியைத் தழுவுகிறது
வாணலியில் வறுபடும் மீன்
மன்னார் வளைகுடா தாண்டியும் தொடரும் நீச்சல்
மடிவலையில் மாய்ந்தடங்கும்
கொந்தளிக்கும் நெருப்புக்கிணையாக
உமிழ்நீர் சுரந்தபடி
நாக்கு காந்தல்ருசிக்கு காத்திருக்கிறது
கூடங்குளத்தில் நிமிர்ந்திருக்கும் அணுவுலைகள்
தினசரிகளும் காணொளிகளும் பகர்வதைப் போல
அறிவியல் அற்புதத்தின் குறியீடுகள் தானா..?
சபலத்தில் அலைவுறும் ருசி மொட்டுகள்
கவலை தோய்ந்து கவிழ்ந்துகொள்கின்றன
மீறியும் ஆசையை பிட்டு மலர்த்துகையில்
ஆவிபறந்து ஆவிபறந்து அறைகிறது பசியில்
சந்தேகக் கதவுகளில் பூட்டு தொங்க
ஆழிக்குள் கலந்துவிட்ட அணுக்கழிவுகளை சீரணித்த
இரைப்பைகளும் கருப்பைகளும்
கல்லறைத்தோட்டங்களில் காத்திருக்கின்றன
தம் கிருபைகளுக்காக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick