மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

து ஓர் ஆய்வு நூல். இதுவரை நான் என் வாழ்வில் பொறுப்பாக எதையுமே ஆராய்ந்தது இல்லை. கண்ணிடுக்கி ஆராய்ந்தபோதெல்லாம் விரும்பத்தகாத, அதிர்ச்சியூட்டும் முடிவுகளே எனக்குக் கிடைத்தன. அவை என் குளிர்தருவை ஒட்ட வெட்டி, மொட்டை வெய்யிலில் என்னை நிறுத்திவைத்தன. எனவே, நான் எதையும் ரொம்பக் கிட்டத்தில் போய்ப் பார்ப்பதில்லை. குறைந்தபட்சம் பத்து மீட்டர் இடைவெளியில் பயணிப்பதென்பது விபத்துகளைத் தவிர்க்க உதவும் என்பது என் எண்ணம்.  ‘கார்குழல்’ என்பது ஒரு செளகர்யம். ‘ஈறும் பேனும்’ என்பது எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும்கூட அசெளகர்யம்தானே? ‘ரஸக் குறைவும்’கூட. ஆனால், சலபதிக்குக் கார்குழலில் ‘மட்டும்’ மயங்கித் ததும்பும் பாக்கியமில்லை. அவர் ஈறையும் பேனையும் கண்டாக வேண்டும். இப்பிறப்பில் அவர் விதி அப்படி!

தகவல்கள், அதன் வழி பெறப்படும் அறிவு, அவ்வறிவின் துணையோடு நடத்தப்படும் தர்க்கங்கள் ஆகியவற்றில் ஒரு கவிஞனாக எனக்குப் பெரிய அக்கறை இல்லை. கவிதை முட்டாள்தனத்தில்தான் சுவாரஸ்யம் கொள்கிறது, உச்சமடைகிறது என்பது என் எண்ணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick