நான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

நான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்

ஓவியம் : பிரேம் டாவின்ஸி

ந்த நகரும் இரவை அடையாளப்படுத்த
தூய்மையான கண்ணீர்த்துளியை வைத்திருக்கிறேன்
மெள்ள இறந்துகொண்டிருக்கும் கடலிலிருந்து
கேட்கும் முனகலைப்போல
வாழ்வு ரகசியமாய் ஏதோ சொல்ல வருகிறது
கரிய நிறங்களைப் பூசிக்கொண்டு
ஓர் இருள் வந்து நிற்கும்போது
அதனிடம் கோழி சாப்ஸ் வேணுமா என்கிறேன்
நம் மரணம் இவ்வளவுதான்
அதற்கான கயிறோ பிளேடோ
தன்னை மென்மையாய் காட்டிக்கொள்கின்றன
இங்கே நான் ஒரு சிறிய புழங்குவெளியில் இருக்கிறேன்
தன் பழுப்பு நிறப் பக்கங்களால்
அதன் காலைப்பொழுதை எழுதும் பகலவன்
இந்த உரையாடலில் எத்தனையாவது முறையாக
‘நான் தனியாகவே
இருக்கிறேன்’ என்பதை உச்சரிக்கிறேன்
வெறுமை தாங்காது அறைகள்
கல்லறைகளாய் தங்களை மாற்றிக்கொள்ளுமெனில்
வரலாற்றின் தொல்லியல் பொருளாய்
நான் கண்டெடுக்கப்படுவேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick