நத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உணர்கொம்புகள்

யிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிக நுணுக்கமான உறுப்பு, உணர்கொம்பு. கண்களும்தான். ஆனால், பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள். உணர்கொம்புகளைப் பற்றி வாசிக்கையில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ‘கடவுளே!’ என்று கூவிவிடுவோம்.

சில பூச்சிகளின் தலைமயிர் அளவே உள்ள உணர்கொம்புகள், கண்ணுக்கே தெரியாத பல்லாயிரம் நுண்ணிய சிற்றுறுப்புகளின் தொகைகள். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அவற்றால் மணங்களையும், ஒலிகளையும், அதிர்வுகளையும், நீர்ப்பதத்தையும் அறிய முடியும். புலியின் உணர்கொம்புகள், அதன் பாதையை வகுக்கின்றன. அதன் உடல்மொழியில் மீசை முக்கியமான கருவி.

இம்மண்ணில் உயிர்கள் வளர்மாற்றம் கொண்ட பெருஞ்செயலுடன் இணைந்தே உருவானவை உணர்கொம்புகள். எது அவற்றின் சூழலைச் சமைத்ததோ, அது கூடவே உணர்கொம்புகளையும் வடிவமைத்தது. தேனீக்களின் உணர்கொம்புகள், மலர்களின் உறுப்புகளே. புலியின் உணர்கொம்புகள், அக்காட்டின் ஒரு பகுதியே.

உணர்கொம்புகளை இழந்தால், அந்த உயிர் பறிகொடுப்பது எதை? அச்சூழலுடன் அதை இணைக்கும் அனைத்தையும். அதன் கோடிகோடி முன்னோர் வாழ்ந்து அடைந்த ஞானம் அனைத்தையும்.

1995-ல் ஊட்டி நாராயண குருகுலத்தில் நான் சந்தித்த ஜெர்மனியப் பேராசிரியர் ஒருவருடன் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். அகோரவீரபத்ரரின் சிலையை நோக்கி நின்ற பின் என்னை நோக்கி, “ஒரு பேரழிவு நடனம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick