"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை!” - ஆதவன் தீட்சண்யா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கரின் சந்தடிமிக்க சதுக்கம். அங்கு சேவல் சண்டை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு ஒலிக்கிறது. அந்தத் தென்னமரிக்க நாட்டினர் சேவல் சண்டையை வெறித்தனமாக ரசிப்பவர்கள். பெருங்கூட்டம் திரள்கிறது. சண்டை தொடங்குகிறது. ஆரம்பத்தில் இரு அணிகளாகப் பிரிந்திருந்த பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகவும் சாதுர்யமாகவும் சண்டையிடும் சேவலின் ஆதரவாளர்களாகிவிடுகிறார்கள். இந்தச் சேவலின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நுட்பமுமற்ற மற்றொரு சேவல் துவண்டு விழுகிறது. தோற்றுக்கிடக்கும் அந்தச் சேவலைத் தலைக்கு மேலே தூக்கிக் காட்டும் நடுவர், அதுவே வென்றதாக அறிவிக்கிறார்.

‘இது அநியாயம்!’ என்ற கண்டனக் குரலுடன் மக்கள், நடுவரை நோக்கிப் பாய்கிறார்கள். அப்போது நடுவர் கேட்கிறார்: ‘‘தோற்றுப்போன சேவலை வெற்றிபெற்றதாக அறிவித்ததற்கு இப்படிக் கொந்தளிக்கிறீர்களே, தேர்தலில் தோற்றுப்போன ஆளுங்கட்சி வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டு இன்னமும் ஆட்சியில் நீடிப்பதை ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்? இந்த மோசடிக்குத்  தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் உடந்தையாக இருப்பது சரியா?’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick