லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா | Conversation with a Libi Aranya - Vikatan Thadam | விகடன் தடம்

லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : வி.சதிஷ்குமார்

துரை புறநகரில் இருக்கிறது, கவிஞர் லிபி ஆரண்யாவின் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால், ஹால் துவங்கி எங்கேயும் ஒரு புத்தகமும் இல்லை. சில தினசரிகள் மட்டுமே காபி மேஜையில் கிடந்தன. ஆச்சர்யமாக இருந்தது. நல விசாரிப்புகளுக்குப் பின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தது அவரது நூலகம். மாடியில் சின்ன அறை; அதன் வாசலில் கொஞ்சம் இடம்; அதையொட்டிய இரண்டு அலமாரிகள்; நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். “இவை அடிக்கடி ரெஃபரென்ஸுக்காக எடுக்கிற புத்தகங்கள். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின் வாசஸ்தலங்கள். மற்ற புத்தகங்கள் அறையின் உள்ளே இருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்ட மாட்டேன். உள்ளே அலங்கோலமாகக் கிடக்கிறது. கண்டிப்பாகப் புகைப்பட அனுமதி இல்லை” என்று சிரிக்கிறார் லிபி.

“நிலக்கோட்டையில் உள்ள நாடார் நடுநிலைப் பள்ளியில்தான் படித்தேன். ஆறாவது படிக்கும்போதுதான் பாடநூல்களைக் கடந்த வேறு புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். பள்ளியை ஒட்டிய கடைகளில், பள்ளி இடைவேளை நேரங்களில் தின்பண்டம் வாங்கப்போகும்போதுதான் ஒரு காட்சியைக் கண்டேன். துணிகளைக்காயப்போடுவது போல புத்தகங்களை வரிசையாக அந்தக் கடையில் மாட்டித் தொங்கவிட்டிருந்தனர். 15 காசுகள் அல்லது 25 காசுகள்தான் விலை. அன்றைக்கு அது பெரிய தொகை. இன்று டாஸ்மாக் வாசலில் கையில் இருப்பதைப் போட்டு குவாட்டர் வாங்கி கட்டிங் பிரித்துக்கொள்கிறார்களே, அதுபோல் ஆளுக்கு 10 காசு போட்டு அந்தப் பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கினோம். பின்னர் ஒவ்வொரு மாதமும் நண்பர்களின் வீடுகளுக்குப் புத்தகம் வரும் தேதி அன்று, ‘யதார்த்தமாக’ போகத் தொடங்கினோம். கண்ணன் என்கிற நண்பர் தற்போது சென்னையில் இருக்கிறார். அவரின் வீட்டுக்குச் சரியான தேதியில் `அம்புலிமாமா’, `பாலமித்ரா’ போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் வந்துவிடும். இப்படி காமிக்ஸ் கேரக்டர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்த நாள்களை மடைமாற்றிவிட்டவர்கள் மூன்று ஆசிரியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick