தலையங்கம்

21-ம் நூற்றாண்டில், கற்பனைகளை மிஞ்சும் அறிவியல் சாத்தியங்களோடு அதிநவீன சமூக வாழ்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். ஆயினும், இந்தச் சமூக அமைப்பில் இன்னும் பெண்கள், எதிர்கொண்டுவரும் அடக்குமுறைகளும், சுரண்டல்களும், உளவியல் நெருக்கடிகளும் சொற்களுக்குள் அடங்காத துன்பக் கதைகளாகவே தொடர்கின்றன. இதை மாற்றுவதற்கான சமூகக் கருவிகளில் ஒன்றாக கலை இலக்கியம் கையாளப்பட வேண்டும். மார்ச் 8, எண்ணற்ற பெண்களின் தியாகக் குருதியிலிருந்தும் கண்ணீரிலிருந்தும் எழுந்த சூர்யோதயத்தின் நாள். அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்!

நவீனச் சிற்றிதழ்வெளியில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் க.சீ.சிவகுமார், சமீபத்தில்  இயற்கையில் கலந்துவிட்டார். அவருக்கு நம் அஞ்சலி.

சமகால இந்திய இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவரான மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் நேர்காணல், சோ.தர்மனின் வட்டார எழுத்துகள் குறித்த மீள்பார்வை, ஜி.விஜயபத்மா மொழியாக்கம் செய்த, உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் சிறுகதை, ஆர்.சூடாமணியின் நட்பைப் பகிர்ந்துகொள்ளும் அம்பையின் நினைவுகள், தஞ்சை விவசாயப் பெண்களின் நிலையை களஆய்வின் வழி முன்வைக்கும் ப்ரேமா ரேவதியின் கட்டுரை, பாவண்ணன் மொழியாக்கம் செய்த, கன்னடக் கவிஞர் சித்தலிங்கையாவின் சுயசரிதைப் பகுதி, பொன்னீலன், யூமா வாசுகி, ரமேஷ் வைத்யா, ஆதவன் தீட்சண்யா, சி.மோகன், அ.முத்துலிங்கம், சு.வெங்கடேசன் பங்களிப்புகளுடன் தொடர்கள், கதைகள், கவிதைகள் என இந்த இதழ்!    

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick