‘திராவிட’ அரசியலின் எதிர்காலம் - சுகுணா திவாகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

து திராவிட இயக்கம்? உண்மையில் தமிழக அரசியல் வரலாற்றில் சிக்கலான கேள்வி இது. பலரும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளை மொத்தமாகத் ‘திராவிட இயக்கங்கள்’ என்று அழைக்கின்றனர். இன்னும் சிலர், குறிப்பாக திராவிட அரசியலைக் கடுமையாக விமர்சிப்பவர்கள், பெயரில் திராவிடத்தைச் சுமந்திருக்கும் காரணத்தாலேயே விஜயகாந்தின் ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழக’த்தையும் திராவிடக் கட்சி என்று அடையாளப் படுத்துகின்றனர். (அவர்கள் ஏன் விஜய டி.ராஜேந்தரின் ‘லட்சிய தி.மு.க.’வை விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை!)

பெரியார் உருவாக்கியது திராவிடர் இயக்கம். நடேசனார், டி.எம்நாயர், சர் பிட்டி.தியாகராயர் ஆகியோரால் ‘பார்ப்பனரல்லாதோர் கொள்கைப் பிரகடனம்’ வெளியிடப்பட்ட 1916-ம் ஆண்டிலிருந்து ‘பார்ப்பனரல்லாதோர்’ என்ற அரசியல் சொல்லாடலே இருந்துவந்தது. ‘பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி நாம் ஏன் நம்மை அல்லாதோர் என்று அழைத்துக்கொள்ள வேண்டும்?’ என்ற பெரியார், ‘திராவிடர்’ என்ற அரசியல் சொல்லாடலை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அதற்கு முன்பே அயோத்திதாசர், ஜான் ரத்தினம் போன்றவர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக அதனை வெகுமக்கள் அரசியல் சொல்லாடலாக பெரியார் மாற்றிக்காட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick