ஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஷ்ட ஜாதகன். கஷ்ட சாகரன். மனோ துக்கன். மோக லோலன்… இப்படிப் பல சொற்கள். க.சீ.சிவகுமார் தன்னைப் பற்றிய வர்ணனைகளாகக் கழிவிரக்கப் போதுகளில் சொன்னவை. அப்படி ஒரு பொழுதை, தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. பெரும்பான்மை அப்படித்தான் கவிந்திருந்தன. முள்ளுக்குள் கிடக்கும் கள்ளிப்பழம் போலத்தான் சோகங்களுக்குள்ளேயே அவன் சந்தோஷம் கொண்டாடியதும்.

அதனாலேயே, சின்னப் பொருளும் அவனுக்குப் பெருத்த சந்தோஷம் தந்துவிடும். ‘பிராக்கெட்’ என்று எழுதப்போனவன், ‘பிறைக்கட்டு’ என்று எழுதிவிட்டான். அதைப் படித்துப் படித்துச் சிரித்துக்கொண்டிருந்தான். சிரிப்பு என்பது இங்கே மகிழ்ச்சியின் வெளிப்பாடு. ஒருவேளை இந்தக் குணாம்சமே அவனை இத்தனை நாள் காப்பாற்றியிருக்கக்கூடும்.

தான் பார்த்த வெவ்வேறு குணச்சித்திரங்களை வரையும்போது அந்தக் கட்டுரைகளுக்கு ‘குணசித்தர்கள்’ என்று தலைப்பு வைத்தான். தானே ஒரு குணசித்தன் என்று அவன் அறிந்துகொண்டதன்பேரில் கிட்டிய சொல்லாடல் அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick