விலகுதல் - சக்தி ஜோதி | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

விலகுதல் - சக்தி ஜோதி

ஓவியம் : செந்தில்

சமீப நாட்களாக
அவளின் அதிகாலைகளை
சிட்டுக்குருவிகள்
திறந்துவைக்கின்றன

தானியங்களைத் தூவி
அவைகளுக்காகக் காத்திருக்கையில்
நினைவிலசைகிறது
விலகிச்சென்ற உறவுகளும்
மீண்டெழுந்த கணங்களும்

பிரசன்னமாகும் முகங்கள்
பிரியங்கள்
அதன் பொருட்டான வாக்குறுதிகள்
அவற்றை பின்பற்ற இயலாத சூழல்கள்
எப்பக்கமும் அலையடித்துக்கொண்டிருக்க
தரையிறங்கியிருக்கும் அச்சிறு பறவைகள்

இறையெடுத்த பின்
எந்த கணத்தில் நிலம்விட்டு
வானம் ஏகும் என்பதை
ஒருபோதும் கணிக்க இயலுவதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick