தலையங்கம்

தொடர்ச்சியான கலை, இலக்கிய, சமூகச் செயல்பாடுகளே ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வியல் முன்னேற்றத்துக்கும் உதவுகிறது என்று அழுத்தமாக நம்புகிறது விகடன். தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளிகளை அடையாளம் காணவும் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் ஏற்படுத்தப்பட்டதே விகடன் விருதுகள். தனித்துவமான மேடையில் 2016-ம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழின் பெருமித முகங்களால் நிறைந்திருந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா, இலக்கிய உலகில் ஒரு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. எவ்விதச் சார்புமற்று தமிழின் அனைத்துப் படைப்பாளிகளையும் ஒன்றிணைத்து நடத்தப்பட்ட புதிய முயற்சி இந்த விழா.

தமிழில் எழுதும் இயங்கும் அனைவருக்குமான பொதுவெளியாக, புது வழியாக இருப்பதே நம் விருப்பம். தமிழ் இலக்கியத்தை இன்னும் விரிவான வாசிப்பிற்கும் உரையாடலுக்கும் கவனத்துக்கும் கொண்டுசெல்ல விரும்புகிறது ‘விகடன் தடம்’. உங்களின் ஒத்துழைப்போடு பல புதிய கனவுகளில் நம்பிக்கைகொள்கிறோம். 

நமது நம்பிக்கைகளும் மகிழ்ச்சியும் பன்மடங்காகட்டும்.

நம்மை நாம் கொண்டாடுவோம்!

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick