எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

ஸ்ரீதர்பாரதி

“மு
னை மழுங்கி, துருப்பிடித்து, குலைந்த மாட்டுக்கொட்டகைக் குவியலில் கிடக்கும் ஏர்க்கலப்பையைப்போல என் வாழ்க்கை. உழுதுண்டு உயர்வோடு வாழ்ந்த பெருங்குடியில் உதித்தவன். இன்று, அந்த மரபைத் தொலைத்துவிட்டு நிலமிழந்து ஏதிலியாய் கவிதையைப் பற்றிக்கொண்டு நிற்கிறேன். அழுத்தும் வாழ்வின் சுமைகளை எழுத்தில் இறக்கிவைக்கிறேன். கண்மாய்க் கரையில் கிடை நடத்திச் செல்லும் மேய்ப்பனை நிகர்த்தவன் நான். அவன் கரத்தில் ஆகாசம் பார்க்கும் தொரட்டிக் கம்பும் என் பேனாவும் வேறல்ல. மனம் முழுக்கப் பச்சையை நிறைத்து வைத்துக்கொண்டு நகரத்து வெம்மையில் குலைந்துகொண்டிருக்கும் என்னை, கவிதைதான் சாந்தப்படுத்துகிறது. சொல்லுழவு செய்து நான் விதைப்பவையெல்லாம் என் சந்ததிக்கான வரலாற்றின் விதை.” 

கள்ளக்குறிச்சியைப் பூர்வீகமாகக்கொண்ட ஸ்ரீதர்பாரதி, மதுரையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் பிரதிநிதியாகப் பணிபுரிகிறார். ‘செவ்வந்திகளை அன்பளிப்பவன்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இவரது இயற்பெயர் ஸ்ரீதர்.  ‘கருப்புவெள்ளைக் கல்வெட்டு’, ‘ஒரு கிராமத்தின் சித்திரம்’ ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick