கவிதைகள் - ரவிக்குமார்

ஓவியம்: ரமணன்

வெற்றிப் பயணம்

ரியும் சிதைகளால்
ஒளியூட்டப்பட்ட ஓடுபாதையில்
இறங்குகிறது உங்கள்
விமானம்

பறந்து பறந்து
பறந்து பறந்து
சென்று
கற்று வருகிறீர்கள்
பறவைகளைப்
பறக்க முடியாமல் செய்வது எப்படி
என்னும் வித்தையை

வரவேற்க
வரிசையில் காத்து நிற்கிறோம்  
கொய்யப்பட்ட
எங்கள் தலைகளை
எங்கள் கைகளில்
ஏந்தியவாறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்