எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

ஸ்டாலின் சரவணன்

“ந
னவிலிருந்து நனவிலிக்கான பயணத்தின் ஒரு புள்ளியில் துளிர்க்கின்றன எனது கவிதைகள். கடந்துவந்த காட்சிகளில் ஏதேனுமொன்று கால் முளைத்துக் கிளம்பிவந்து என் கதவைத் தட்டக்கூடும். புற உலகிலிருந்து பெறத் தவறவிட்ட அனுபவங்களை வாசிப்பின் வழியே ஈடுசெய்வதென்பது ஆனந்த அனுபவம். இச்சிறு பிறப்பில் நிறைந்திருப்பவைக்கும் வெற்றிடத்திற்குமிடையே வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டேயிருக்கும் என் கவிதைகள்...”

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியைச் சேர்ந்த ஸ்டாலின் சரவணன், மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘தேவதைகளின் வீடு’, ‘ஆரஞ்சு மணக்கும் பசி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பு  என்ற ஓர் அமைப்பையும் நடத்துகிறார். விரைவில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick