தமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் - சுகுணா திவாகர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அம்பேத்கர் உருவும் மறு உருவாக்கங்களும் நூலை முன்வைத்து....

னிதாவின் தற்கொலையையொட்டி, தமிழ்த் திரைப்படத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ஆவேச எதிர்வினை, தமிழ்ச் சூழலில் கடும் விவாதப்பொருளானது. “எத்தனை நாளைக்குத் தமிழன், தமிழன்னு பூச்சாண்டி காட்டப்போறீங்க? அனிதா ஒரு தலித் பெண். இங்கே சமூகநீதி என்பது தலித்துகளின் பிரச்னைகளை அங்கீகரிப்பதாக இல்லை” என்பது இரஞ்சித் பேச்சின் சாராம்சம். ‘இந்த மேடையில் ஏன் இரஞ்சித் இதைப் பேச வேண்டும்? அனிதா ஒரு தலித் பெண் என்பதனால் அவர் தற்கொலைக்குத் தள்ளப்படவில்லை. பறிக்கப்படும் மாநில அரசின் உரிமைகள், ‘ஒரே தேசம்’ என்ற பெயரில் நடத்தப்படும் அதிகாரக் கருத்தியல் வன்முறை ஆகியவைதான் அனிதாவின் மரணத்துக்குக் காரணம்’ என்பது இரஞ்சித்தை விமர்சித்தவர்களின் வாதம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick