“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது!” - ஜி.எஸ்.தயாளன் | Writer H.G. Rasool no more - Vikatan Thadam | விகடன் தடம்

“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது!” - ஜி.எஸ்.தயாளன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் பேருந்தில், பின்னாலிருந்து ஒரு முதியவர் “இறங்கணும்... இறங்கணும்” எனச் சன்னமாகக் கத்துகிறார். முன்னிருக்கையிலிருக்கும் நடத்துநருக்குக் காதில் விழத் தாமதமானதால், நிறுத்தம் தாண்டி ரொம்ப தூரம் சென்ற பின் பேருந்து நிற்கிறது. தட்டுத்தடுமாறி இறங்கிப் போகிறார் முதியவர். ‘நிறுத்தச் சொல்லித் தானும் ஒரு குரல் எழுப்பியிருக்கலாம்’ என அங்கலாய்த்துக் கொள்கிறது ஹெச்.ஜி.ரசூலின் ஆரம்பகாலக் கவிதை ஒன்று. அந்த மென்மையான குரல் ரசூலின் அசலான குரலும்தான். ஒலிக்கத் தவித்த அந்தக் குரல் பின்னாள்களில் தன்னுடைய 14 புத்தகங்களிலும் வலுவாக ஒலித்திருக்கிறது.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick