தற்கால ஆங்கிலக் கவிதைகள் - தமிழில்: அனுராதா ஆனந்த்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நல் வாழ்க்கை  - ட்ரேஸி கே ஸ்மித்

காலையில் பால் வாங்க வெளியில் சென்று
பின்பு வீடு திரும்பாத ஒரு மர்மக் காதலனைப்போல
பணத்தைப் பற்றிச் சிலர் பேசுகிறார்கள்.
எனக்கு அது பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது.
காப்பியும் ரொட்டியுமே உண்டு பல வருடங்களைக் கழித்திருக்கிறேன்.
எப்போதும் பசியோடும் சம்பள நாளில் வேலைக்கு நடந்தே சென்றபடியும்
கிணறில்லா சிற்றூரில் வசிக்கும் பெண்ணின் தண்ணீருக்கான பயணத்தைப்போல
பின்பு ஓரிரு இரவுகள் பொரித்த கோழிக்கறியும்
சிவப்பு வைனும் அருந்தியபடி எல்லோரையும் போலவும் வாழ்ந்திருக்கிறேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்