எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன், விஷ்ணுபுரம் சரவணன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

உமையவன்

“ஏர்வழியே நேர்வழி என்றெண்ணி வாழ்ந்த எளிய வேளாண் குடும்பத்துப் பிள்ளை நான். என் எந்தத் தலைமுறையோடும் எழுத்துக்குப் பந்தமில்லை. உயிர்ச்சூடு தனியாமல் பதமாக்கிவைத்த வைக்கோல் கோட்டைக்குளிருந்து தெறித்து விழுந்து துளிர்த்த முதல் விதை நான். கைவிட்டுப்போன உழவு வாழ்க்கையைத் தேடித் திரிந்து ஓலமிடும் ஒரு குடியானவனின் துயரத்தைப் பின்தொடர்கிறது என் எழுத்து. என் மொழியென்பது, வயல் நீரோட்டத்தின் ஈரம் தோய்ந்தது. எவரின் பார்வையும் விழாத, ஊர்ப்புறச் சுவற்றில் கிறுக்கப்படும் கரிக்கோட்டுச் சித்திரங்களை நான் எழுத்தாகப் பெயர்க்கிறேன். அதன் வழி என் பெயர் கவிஞனாகிறது...”

ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த உமையவன், கோவை டைடல் பார்க்கில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ‘சீனியர் அனாலிசிஸ்ட்’ ஆகப் பணிபுரிகிறார். ‘நீர் தேடும் வேர்கள்’, ‘விதையின் விருட்சம்’ ஆகிய கவிதை நூல்களையும்  ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’, ‘ஆகாய வீடு’ உள்ளிட்ட சிறுவர் கதை நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘உழுத புழுதி’ என்ற கவிதை நூலும், ‘குட்டி யானையும் குறட்டைச் சத்தமும்’ என்ற சிறுவர் நூலும் விரைவில் வெளிவரவுள்ளது. இவரது இயற்பெயர் ப.ராமசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick