நத்தையின் பாதை - 11 - சுவையின் பாதை - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்ற 2016-ல், பிரித்தானிய எழுத்தாளரான ராய் மாக்ஸம் என் இல்லத்திற்கு விருந்தினராக வந்திருந்தார். பிரித்தானியர் இந்தியாவை ஆட்சிசெய்த தொடக்கக் காலகட்டத்தில், உப்பு வணிகத்திற்குச் சுங்கம் வசூலிக்கும் பொருட்டு இந்தியாவுக்குக் குறுக்கே அவர்கள் எழுப்பிய மாபெரும் வேலி குறித்தும், அவர்கள் இங்கே உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் புகழ்பெற்ற நூலாகிய ‘The Great Hedge of India’ எனும் நூலை எழுதியவர் ராய் மாக்ஸம். (‘உப்புவேலி’ என்ற பெயரில் சிறில் அலெக்ஸால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது).

ராய், மூன்று நாள்கள் என்னுடன் தங்கினார். இங்கே சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். இந்தியா மீதும் இந்தியப் பண்பாடு மீதும் ஆழமான ஈடுபாடு கொண்டவர், ராய். பேச்சினூடாக எங்கள் இலக்கிய ரசனை குறித்த முரண்பாடு எழுந்துவந்தது. ராய், ஆங்கில இலக்கியத்தில் அவருக்குப் பிடித்தமான படைப்பாளிகளாகச் சொன்னார்... சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஜார்ஜ் ஆர்வல், டி.எச்.லாரன்ஸ், விளாடிமிர் நபக்கோவ், ஜோசப் கான்ராட் போன்றவர்கள். கவிஞர்களில் ஷேக்ஸ்பியர் அவருக்கு உச்சம்.

“எனக்கு அவர்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர்களாக இல்லை” என்றேன். டிக்கன்ஸ், எனக்கு எளிய மனிதநேயத்துக்கு அப்பால் செல்லாத மெல்லுணர்ச்சிக் கலைஞர் மட்டுமே. ஜார்ஜ் ஆர்வல், எதிர்மறைப் பண்புகொண்ட அங்கத எழுத்தாளர். அவரின் அங்கதம், தத்துவம் கண்டடையும் மானுட முடிச்சு ஒன்றை முன்வைக்கும் உயர்தர அங்கதம் அல்ல. அரசியல் நம்பிக்கையால் ஆன ஒருவகை விமர்சனம் மட்டுமே. ஆகவே, இலக்கிய அழகியல் நோக்கில் முதன்மையானது அல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick