சங்கப் பரத்தையர் - அ.நிலாதரன்

ஓவியம் : வேல்

சேலைத் தலைப்பைத் தலைக்கு முக்காடிட்டு
கார்கால மழையில் நனைந்தவாறே
அம்மா பனங்கூடலிலிருந்து பொறுக்கிச் சேகரித்து
கும்பாரமிட்ட பனங்கொட்டைகளை
இந்த முன்பனி மாலையில்
தோண்டி எடுக்கிறார் அப்பா கிழங்குகளாக
அவித்த பனங்கிழங்கின் தோலுரிக்கையில்
செங்கால் நாரை இணையொன்று
பனங்கிழங்கிலிருந்து வெளியேறி வடதிசைக்கு ஏகுகிறது
கையதுகொண்டு மெய்யது போத்தி
சத்திமுத்தப் புலவன்
குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறான்
உரித்த கிழங்குத்தோலை
புலவனுக்குப் போர்த்திக்கொள்ளத் தந்துவிட்டு
வேகவைத்த சங்கப் பரத்தையின்
வாளிப்பான கால்களை
வேட்கையோடு ருசிக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick