முதன்முதலாக - சாரு நிவேதிதா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : சிவகிருஷ்ணா

2000-வது ஆண்டு பிறந்திருந்தது. பாரிஸில் வசிக்கும் ஷோபாசக்தி என்னை அங்கே அழைத்தார். ஓர் இலக்கியச் சந்திப்பை முன்வைத்து நான் அங்கு செல்வது என்று திட்டமிட்டோம். வீசா வாங்குவதற்கு அது ஒரு வலுவான காரணமாக இருக்கும்.  பணக்காரர்களுக்கு எடுத்த எடுப்பில் வீசா கிடைத்துவிடும்; பராரிகளுக்கு அப்படியில்லை. மேலும், என்னை அங்கே அழைப்பவர்களும் கனவானாக இருந்தால் நலம்.  புலம்பெயர்ந்து வாழும் ஓர் அகதி அழைத்தால் எவன் மதிப்பான்? பாரிஸிலிருந்து இலக்கியச் சந்திப்புக்கான அழைப்பும் பாரிஸின் மேரி (முனிசிபாலிட்டி) சான்றிதழும் எனக்குக் கிடைத்துவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick