முதன் முதலாக: நினைவில் மிதக்கும் பனிக்குடம் | Interview with writer Kotravai - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

முதன் முதலாக: நினைவில் மிதக்கும் பனிக்குடம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கொற்றவை

12.9.1998-ல் எனக்குத் திருமணம் நடந்தது. அவர் ஓர் ஓவியர். பின்னர் திரைப்பட இயக்குநரானார். தற்போது, அருங்காட்சியகம் மற்றும் கலைத்துறையில் பரிணமித்து வருகிறார். 2010-க்குப் பிறகு, நாங்கள் அந்த உறவை நட்புறவாக்கிக் கொண்டோம். அது இன்றளவும் நட்புறவாகத் தொடர காரணமாக, வாழ்வின் பிடிப்பாக இருப்பவள் எங்கள் மகள், வருணா!

‘வருணா’ என்றால் வண்ணங்கள், மழைக்கடவுள் என்றுதான் பொதுவாகப் பொருள் கொடுக்கின்றனர். ஆனால்,  ‘வருணா’ என்றால் ‘கடவுளுக்கெல்லாம் கடவுள்’ என்ற பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இல்லவே இல்லை எனும் எனக்கு, இப்பெயருக்கான பொருள்களில் பெரிய நாட்டமில்லை. ஆனால், தற்போது அவளுடனான 18 வருட உறவில் வருணா என்றால் தோழி, அன்பு, துணிவு, தெளிவு, புரிதல், அரவணைப்பு, தன்னம்பிக்கை, உற்சாகம், எல்லாவற்றுக்கும் மேலாக என் வாழ்வின் ஒரே காரண காரியமும் ஆகிறாள்.

என் அப்பா Xerox கடை வைத்திருந்தார். குடும்பமாக உழைத்தே நாங்கள் வாழ்ந்தோம். அதில் என் தாய், கடுமையான உழைப்பாளியாக்கப்பட்டவர். நாங்களும் (நானும் எனது தம்பியும்) 10 வயது தொடங்கி, எங்கள் கடையில் வேலைசெய்தே பிழைத்தோம். உழைத்து வாழ வேண்டும் என்பதை மட்டுமே என் தந்தை எங்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளார். (அவருக்கு மார்க்ஸியமெல்லாம் தெரியாது!) ஆண்கள் வந்துபோகும் இடங்களில், கடைகளில், பெண்கள் அமர்ந்து வேலைசெய்தால், இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளுக்குப் பல பட்டங்களை வழங்கி கௌரவிக்கும். அந்தப் பட்டங்களைப் பரம்பரைச் சொத்துமாக்கிவிடும். ஆகவே, நான் தினம் தினம் எங்கள் சாலையைக் கடந்து எங்கள் கடைக்குச் செல்லும் வழியில் பல ஆண்களின் ஆபாசப் பேச்சுகளையும் பட்டங்களையும் சுமந்தபடியே செல்வேன். அந்தச் சிறு வயது தொடங்கி, என்னுள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நான் வளர்ந்து பெரியவளாகி, ‘குடும்ப’ வாழ்வில் ஈடுபட்டு, பத்தினியாக (அடிமையாக வாழ்தல் என்பது அப்போது தெரியாதல்லவா) வாழ்ந்து, ‘சிறந்த குடும்பப் பெண்’ எனும் பெயரெடுப்பேன். அவ்வாழ்வில் கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை மட்டுமே பெற்றெடுப்பேன். இந்த உலகமே வியக்கும் அளவுக்கு அவளை ஓர் ஆளுமையாக வளர்ப்பேன் எனும் வேள்வித் தீ அது. என்மேல் திணிக்கப்பட்ட பாவங்களை மகள் என்னும் ‘திருவுரு’ கொண்டு கழுவிக் களைதல் எனும் பேதைமை மனம். இப்போது அந்த வீண் வீராப்பு வேடிக்கையாக இருந்தாலும், எங்களின் தாய் - மகள் உறவு, சுயமரியாதை, சமதர்மம் என்று வேறொரு தளத்தில் பரிணமித்து பெருவாழ்வு கண்டுள்ளது.

முன்னோட்டங்கள் முடிந்தது, இனி வருணா பிறந்த கதைக்கு வருவோம். 15.8.2000 அன்று வருணா பிறந்தாள். அன்றுதான் என் பிறந்த நாளும் என்பதுதான் இந்தக் கதையின் ஆர்வமூட்டும் அம்சம். எப்படி அவள் அதே நாளில் பிறந்தாள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க