சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 6 - புரூஸ் லீயும் ரோஹிணியும் | 40 Years of Cinema mania - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 6 - புரூஸ் லீயும் ரோஹிணியும்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஷாஜி, ஓவியங்கள் : ரவி

ரு திரைநடிகனின் உடைநடை பாவனைகளைக்கொண்ட ‘தாமரைக்குளம் ஜெயப்பிரசாத்’ என்பவர் கல்லூரியில் எங்களுக்கு ஆசிரியராக வந்தார். சினிமாத் துறையைச் சார்ந்தவர் என்றே தன்னை அவர் அறிமுகம் செய்துகொண்டார். மாநிறத்தில் அழகான தோற்றம். கவனமாக மழித்து ஒதுக்கிய தேள்வால் மீசை. திரைப்படங்களில் ஜெயன் அணியும் உடைகளின் வடிவத்தில் அமைந்தவை அவரது உடைகள். இதமான இருண்ட வண்ணத்தில் பெல்பாட்டம் கால்சட்டை. அதன்மேல் கட்டியிருக்கும் அகலமான அரைப்பட்டைக்குள்ளே, சொருகிவிட்ட இளம்வண்ணச் சட்டை. பின்னிரவில் மலரும் ஏதோ ஒரு காட்டுப் பூவின் அடர் நறுமணம் எப்போதுமே அவரைச் சூழ்ந்திருந்தது. அவர் நடத்தும் மலையாள மொழி வகுப்புகள் சுவையாக இருந்தன. பாடம் குறைவு, பேச்சும் கதைகளும் அதிகம். கிளுகிளுப்பூட்டும் காமக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. அத்துடன் சினிமாக் கிசுகிசுக்களும் அவரது பேச்சில் நிரம்பிவழிந்தன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க