அடுத்து என்ன? - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கௌதம சித்தார்த்தன், படம் : க.பாலாஜி

மரந்தாவும் நானும், அதிகாலை நடை செல்வதற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்த அந்த உஷைப் பொழுது, என் பயணத்தை அடியோடு திசை மாற்றிய நாள். நானும் அவளும் வீட்டின் வெளிக்கதவைத் திறந்தோம், பளீரென்று என் கண்களில் வெட்டியது வெண்ணிற வெறுமை. ஒரு கணம் ஒன்றும் விளங்கவில்லை. அதிகாலைப் பனி வெளியெங்கும் கப்பிக் கிடக்கிறது என்று நினைத்தேன். கடவுளே... கண்களை அழுந்தத் தேய்த்துவிட்டுச் சுற்றிலும் பார்த்தேன். சுற்றுப்புற வெளியெங்கும் மறைந்து, வெள்ளியடித்த நீண்ட சுவர்கள்போல வெண்மை, வெண்மை மற்றும் வெறுமை. திகைத்து நின்ற என்  தோளைத் தட்டிய அமரா, நடக்கச் சொன்னாள். நான் நடக்க நடக்க வெண்ணிற வெளி விரிந்துகொண்டே போனது. நாங்கள் தினமும் பார்க்கும் எந்தக் காட்சியும் இல்லை. நீண்ட அசுத்தமான சாலைகள், கான்கிரீட்  கட்டடங்கள், மரம், செடிகள், தெருநாய்கள், பறவைகளின் கீச்சொலி, வாகனங்களின் இரைச்சல், அதிகாலை நடையாளர்களின் இயக்கம் எதுவுமின்றி நானும் அமராவும் பின்னே வெறுமையும். என் திகைத்த நடையினூடே அக்கணம் சிறகடித்து உள்ளே நுழைந்தது சிறு மஞ்சள் வண்ணத்துப்பூச்சி! அமரா, கைகளை நீட்டி அதைப் பிடிக்க முயல, அது விலகிச் சிறகடிக்க, அந்த வெண்ணிற கேன்வாஸில் ஓர் ஓவியக் கீற்றலைப்போல அதைத் துரத்தினோம். அக்கணம், எனக்குள் சுவாங்சூவின் கவிதை வரிகள் முகிழ்த்தன. “நான் வண்ணத்துப்பூச்சியைக் கனவு காண்கிறேனா? அல்லது வண்ணத்துப்பூச்சி என்னைக் கனவு காண்கிறதா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்