நேற்று முளைத்த பூ | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

நேற்று முளைத்த பூ

சஹானா, ஓவியம் : வேல்

ரு மலையில்
புல்மீது தலைவைத்துப் படுக்கிறேன்
திடீரென்று எங்கிருந்து வருகிறதோ
இந்த மகிழ்ச்சியின் ஊற்று
தலையிலிருந்து
கால் வரை நனைத்து
பின்பு முழுமையாய் மூழ்கடித்து
அந்த மலைப்பரப்பே கடலாகி
நீந்தும் சிறு மீனாய்
மகிழ்ச்சியின் துடுப்புகளை அசைக்கிறேன்.

நான் ஓர் ஆமை
முயலின் வேகத்திற்கு
என்னால் ஈடுகொடுக்க முடியாது
ஆயினும்
நான் நகர்ந்துகொண்டேதான் இருப்பேன்
முயலால் போகமுடியாத எல்லைக்கு
முயலால் தொடமுடியாத உயரத்துக்கு
முயலால் நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்துக்கு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க