மயிர் அழகன் கதைப்பாட்டு | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

மயிர் அழகன் கதைப்பாட்டு

தாணு பிச்சையா, ஓவியம் : கருப்பசாமி

மீன்களையொத்த
விழிகளையுடைய
பழையாற்றுப் பெருங்கிழவன்
நீள் மயிரிழை வாரிமுடிந்த
பாண்டியங் கொண்டையன்

கோள்வழி நாள்வழி
காட்சியில் தெளிந்து
கீழ்க்கணக்கில் ஒழுகிய
இம்முதுகுடி அறிவன்
பின்னாளில்
யாககுண்ட ஜுவாலையால்
விழுங்கப்பட்ட கருதுகோளின்
முந்தைய காதை இது

அய்யனவன்
பெருமனை அகரத்தில்
தான் ஊன்றிவைத்த
சூடாமணி சிறுகல் குழைந்து
வயிரம் பரவி உள்விரிந்து
குன்றமாகி ஒளிர்ந்த காலங்களில்
வகுக்கப்படாத திணைப்புலங்கள்
தழுவ விழைந்தன அதன் ஒண்வெளியை

அய்யனவன்
சுழற்குறியின் திசைகாட்டலில்
கிளைவளர்த்த தாமக்கொடிகள்
தற்காம மயக்கத்தில் பிரிவிலகி
கயிறாய்த் திரிந்தன பின் அவை
குடை அரவங்களாக மாறி

நெடிதுயர்ந்து உமிழ்ந்தன
நஞ்சினும் கொடிய காழ்ப்பை

நீங்க எப்படி பீல் பண்றீங்க