ஹிட்லினி - சிறுகதை | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ஹிட்லினி - சிறுகதை

ஆதவன் தீட்சண்யா ஓவியங்கள் : மணிவண்ணன்

ம்பத்தகாத சம்பவங்களின் விளைநிலமாய் நாடொன்று இருக்குமானால், அது லிபரல்பாளையம்தான். அதுவும், சாக்கிய வம்சத்தாரைக் கபடத்தால் வீழ்த்தி ஆட்சிக்கு வந்த காக்கிய வம்சத்தாரின் கடைசி மன்னரான ஹிட்லினி, அன்றாடம் உறங்கப்போகும் வேளையில் ஏதேனுமோர் அதிர்ச்சியை அறிவித்து, உலகையே பரபரப்பில் ஆழ்த்தும் உச்சத்தை எட்டிப் பிடித்திருந்தார். வியப்பிலாழ்த்தும் விரிமார்பன்ஜி (வி.வி.ஜி) என்கிற புனைபெயரால் புகழ்ந்தழைக்கப்படும் அப்பேர்ப்பட்ட ஹிட்லினி ஆளும் நாட்டில், குடிமக்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? இருந்திருக்கமாட்டார்கள் என்றே எல்லோரும் நினைப்பர். ஆனால், அவர்கள் சும்மாதான் இருந்தார்கள். ‘கோன் எவ்வாறோ குடிமக்களும் அவ்வாறே’ என்கிற முதுமொழியைப் பொய்யாக்கும் விதமாக அவர்கள் சும்மா இருந்தார்கள்.

சும்மா இருந்தார்கள் என்றால், சும்மாவே இருந்தார்கள் என்றில்லை. சோறு தின்றார்கள், வெளிக்கிப் போனார்கள், வேலை பார்த்தார்கள், வரிசைகட்டி வாக்களித்தார்கள், கலவி செய்தார்கள், கண்ணயர்ந்தார்கள், பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள், அதுகளைப் படிக்க அனுப்பினார்கள், பிறகு செத்தார்கள், பிறந்தார்கள், செத்துப் பிறந்தார்கள் அல்லது பிறந்து செத்தார்கள். இப்படி இருக்குமிடம் தெரியாமல் இருந்துவந்த லிபரல்பாளையம் குடிமக்களில் ஒருத்தியாகிய ஏதுமறியாள், இன்று, அவர்களது மன்னர் ஹிட்லினி தருவதைவிடவும் பேரதிர்ச்சியை உலகத்திற்குத் தந்திருக்கிறாள்.

ஏதுமறியாள், பன்னிரண்டிலக்கத்தார் பரம்பரையினள். அவளது தந்தையார் பில்லியனாரப்பன் பெரும் செல்வந்தர். நஞ்சை, புஞ்சை, நாலு பக்கம் தோப்பு என்று திரண்ட சொத்துகளுக்கு அதிபதி. நாட்டில் வருடத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குமளவுக்கு வசதி கொழுத்த நாலைந்து பேரில் அவரும் ஒருவர். ஏதுமறியாளின் தாய் நிமிராதேவியும் லேசுபாசான குடும்பத்தவள் அல்ல. ஆனாலும், அவள் வெறும் திருமதி பில்லியனாரப்பன் அல்லது ஏதுமறியாளின் அம்மா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க