நத்தையின் பாதை - 9 - அகாலக் காலம் - ஜெயமோகன் | Jayamohan Series Naththaiyin paadhai - Vikatan Thadam | விகடன் தடம்

நத்தையின் பாதை - 9 - அகாலக் காலம் - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியர்: ரிவேராவின் சுவரோவியம்

31 ஆண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் திரிச்சூரில் ஓர் இலக்கியக் கூட்டம். திரிச்சூர் ஒரு விந்தையான பண்பாட்டு மையம். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். வணிகத் தலைநகரம் கொச்சி. கலாசாரத் தலைநகரம் திரிச்சூர். அங்கே கேரள சங்கீத நாடக அகாடமி, கேரள சாகித்ய அகாடமி, கேரள லலிதகலா அகாடமி போன்ற பல அமைப்புகள் இருப்பதனால், தெருவெங்கும் கலைஞர்கள் பகல் முழுக்க கலைப்போதையிலும் அந்திக்குப் பின் சாதாரண போதையிலும் தென்படுவார்கள். அரசியல் போதை இரண்டையும் இரு கைகளில் ஏந்தியிருக்கும்.

அந்தக் கூட்டத்தில் நான் பேசினேன். திரிச்சூரைச் சேர்ந்த ஒரு கவிஞரின் நூல் வெளியீட்டு நிகழ்வு அது. எல்லாக் கவிதைகளும் இறந்தகால ஏக்கம் கொண்டவை. கவிஞருக்கு வயது முப்பதுக்குள். ஒரு தாடிக்காரப் புரட்சிக்கார இலக்கியக்காரர் கேள்வி கேட்க எழுந்தார். “உனக்கு என்ன வயது?” என்றார். கவிஞர் சொன்னதும் “இந்தக் கவிதைத் தொகுதியில் இன்றிருக்கும் திரிச்சூரின் ஒரு சித்திரமாவது உள்ளதா?” என்றார். கவிஞரைப் பேசவே அவர் அனுமதிக்கவில்லை. “இன்றிருக்கும் எந்தப் பிரச்னையாவது பேசப்பட்டிருக்கிறதா? இன்றிருக்கும் ஒரு மனித முகமாவது உள்ளதா?”

கவிஞர் கண்ணீர் மல்கினார். “என் தாத்தாவுக்குக் கடைசிக் காலத்தில் பலவிதமான மனச் சிக்கல்கள். வீட்டுத் திண்ணையில் முற்றத்திற்கு முதுகுகாட்டி உள்ளே நோக்கி அமர்ந்திருப்பார். பேச்சு முழுக்க 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வம்புகளைப் பற்றி. அவரைப் போலத்தான் நீயும்...” கவிஞர் விக்கி திக்கி முக்கி, “எனக்கு மனதில் தோன்றியதை எழுதினேன்” என்றார். “ஏன் சமகாலம் உனக்கு மனதிலே தோன்றவில்லை? நீ சமகாலத்தைப் பற்றி எழுதவில்லை என்றால், சமகால வாசகனாகிய நான் ஏன் அதை வாசிக்க வேண்டும்?” என்றார், தாடிப் புரட்சியெழுத்துக்காரர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick