வாய்மொழிக் கதைகளில் எதிர்க்குரல் - ஆ.சிவசுப்பிரமணியன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : அருண் டைட்டன், க.பாலாஜி

ழுத்து வடிவம் பெறாது வாய்மொழியாகக் கூறப்படும் கதைகளே வாய்மொழிக் கதைகள் ஆகும். கர்ணபரம்பரைக் கதைகள், பாட்டி கதைகள், கிராமியக் கதைகள், நாடோடிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் எனப் பல்வேறு பெயர்களில் இக்கதைகள் அழைக்கப்படுகின்றன. என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் இவற்றின் பொதுத்தன்மையாக வாய்மொழியாகக் கூறல் அமைகிறது.

பொழுதுபோக்குக்காக மட்டுமே கூறப்படுவதாக இக்கதைகளைக் குறித்த பொதுவான கருத்து உண்டு. இது ஓரளவுக்கு உண்மைதான். ஆனாலும், இதைக் கடந்து பல்வேறு சூழல்களில் வாய்மொழிக் கதைகள் கூறப்படுவது வழக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பின்வரும் சூழல்களில் வாய்மொழிக் கதைகள் கூறப்படுகின்றன.

1. குழந்தைகள் இரவில் உறங்கச் செல்லும் முன்பு கதைகளைக் கூறி அவர்களை உறங்கச் செய்கின்றனர்.

2. வீட்டு முற்றத்திலோ, மொட்டை மாடியிலோ குழந்தைகளுக்கு நிலாச்சோறு கொடுக்கும்போது கதைகளைக் கூறுகின்றனர்.

3. ஊர்ப் பொது இடங்களிலும், வீடுகளிலும், வேலைத் தளங்களிலும் ஒருவர் கதை கூற, மற்றவர்கள் அவரைச் சூழ்ந்திருந்து அல்லது அவரின் முன் அமர்ந்திருந்து கதை கேட்பது பரவலான நடைமுறையாகும்.

4. ஒரு கருத்தை வலியுறுத்தவும் அல்லது விளக்கவும்கூட வாய்மொழிக் கதைகளைக் கூறுகின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் சிலர் கதையை முழுமையாகக் கூறாமல், அக்கதையை உள்ளடக்கிய பழமொழியையோ, பழமொழிச் சொற்றொடரையோ கூறுவதுண்டு. ‘தெனாலிராமன் மனை வளத்தாப்பில’, ‘வாய்க்கொழுப்பு சீலயில வடியுது’, ‘சந்நியாசிக்கும் சம்சாரம் பெருத்தாப்ல’ என்ற சொற்றொடர்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். இவ்வாறு ஒருவர் கூறும் சொற்றொடரில் அடங்கியுள்ள கதை, சுற்றி உள்ளவர்களுக்குப் புரியாதபோது அவர்கள் விளக்கம் கேட்க, அதன் அடிப்படையில் அக்கதையைக் கூறுவதுண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick