"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி | No More politics without Periyar and Ambedkar - Shobasakthi | விகடன் தடம்

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார்

ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் மாறியிருக்கும் ஷோபாசக்தியை, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்காகக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் சந்தித்தோம்.

“உங்களுக்குப் பிடித்த பைபிள் வரிகளுடன் நேர்காணலைத் தொடங்கலாம்...”

“ ‘எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு  எங்களைக் கொண்டுவந்தீர்?’

எங்களது அகதி வாழ்க்கையைக் குறிக்க இதைவிடச் சிறந்த வாக்கியம் ஏது? ‘ம்’ நாவலின் முகப்பில் இதைக் குறிப்பிட்டே கதையைத் தொடங்கினேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick